என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவி போலீசில் புகார்"
போரூர்:
சாலிகிராமம், ஸ்டேட் பாங்க் காலனி, 2-வது தெருவில் வசித்து வருபவர் இம்ரான் (வயது 25). இவரது மனைவி சரஸ்வதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இம்ரான் திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு வந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அதிகாலை இம்ரான் வீட்டுக்கு ஆட்டோவில் மர்ம வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இம்ரானை வெளியே அழைத்து திடீரென சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டனர். அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என்று கூறி மர்மகும்பல் கணவர் இம்ரானை கடத்தி சென்று உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.
இம்ரான், திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்த போது ஏதேனும் தகராறு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். அங்கு வேறு யாருடனும் ஏற்பட்ட மோதலில் அவரை மர்ம கும்பல் கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே வீட்டில் இருந்த இம்ரானை மர்ம நபர்கள் தாக்கி கடத்தி செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி கடத்தல் கும்பல் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, எஸ்.பி.கோவில் தெரு, இருளர் காலனியில் வசித்து வந்தவர் வினோத் (வயது 23). வேன் டிரைவர். இவரது மனைவி சங்கீதா.
இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி இரவு வினோத்துக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதுபற்றி அவர் மனைவி சங்கீதாவிடம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் வினோத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது பற்றி சங்கீதா ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தொழில் போட்டியில் வினோத்தை யாரேனும் கடத்தினார்களா? அல்லது பெண் தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்